சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார், ரஜினிக்கு அரசியலுக்கு வந்தால் தீவிரமாக எதிர்க்கப்போவதாகவும், தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்றும் கூறினார்.

இது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சம்மந்தம்மில்லாமல் சரத்குமார் எதற்காக எங்கள் தலைவரை பற்றி பேச வேண்டும்மென கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், சோளிங்கர் நகர பேருந்து நிலையத்தில் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் ரவி தலைமையில் திரண்ட ரஜினி ரசிகர்கள், நடிகர் சரத்குமார் உருவபொம்மையை எரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

அதோடு, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் எங்கள் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பை எவராலும் தடுக்க முடியாது என எச்சரித்தனர்.

எங்கள் தலைவர் தமிழன் இல்லை என்று சொல்லும் நீங்கள் நடிகர் சங்க தேர்தலின் போது ஏன் தமிழர் அல்லாத ஒருவரின் ஆதரவை நாடினீர்கள்?

தலைவரின் ரசிகர்களுக்கு அன்பாய் பேசுபவரிடம் அடிபணியவும் தெரியும் தலைவரை எதிர்ப்பவர்களை அடக்கவும் தெரியும். சீண்டி பார்த்தவங்க எல்லாம் சின்னாபின்னமா போயிருக்காங்க. யார எதிர்க்கிறோமுன்னு தெரிஞ்சுட்டு பேசுங்க என எச்சரித்தும் கோஷங்கள் எழுப்பினர்.