sarathkumar acting varalakshmi movie
தந்தை - மகள்
கோலிவுட்டில் 'தந்தை மகன்', 'தந்தை மகள்' இணைந்து நடிப்பது புதிதல்ல. 'சிவாஜி- பிரபு','தியாகராஜன்- பிரசாந்த்', 'சிவக்குமார் சூர்யா'. 'தந்தை மகள்' என்று பார்த்தால் 'பாக்யராஜ் -சரண்யா','கமல்ஹாசன்- ஸ்ருதிஹாசன்' 'அர்ஜுன் -ஐஸ்வர்யா 'என்று சொல்லிக் கொண்டே போகலாம் .
சரத்குமார் -வரலட்சுமி
தற்போது அந்த வரிசையில் கோலிவுட்டில் ஒரு அப்பா மகள் இணைந்திருக்கின்றனர். சமத்துவ மக்கள் கட்சித்தலைவரும் நடிகருமான சரத்குமாரும், அவரது மகளும் வரலட்சுமியும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாம்பன்
தற்போது சரத்குமார் பாம்பன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.சரத்குமார் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஏ.வெங்கடேஷ். சரத்குமாரின் மகாபிரபு, சாணக்யா,ஏய்,சண்டமாருதம் போன்ற படங்களை இயக்கியவர் இவர்.இவர்தான் தற்போது பாம்பன் படத்தை இயக்கி வருகிறார்.
முக்கிய வேடம்
இந்த படம் பாம்பு பற்றிய கதையாம்,சீரியல்களில் பெண் பாம்புகள் கவர்ச்சியாக வந்து கொண்டிருக்க தற்போது இந்த படத்தில் சரத்குமார் பாம்பாக வந்து மிரட்ட இருக்கிறார்.இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 23 ம் தேதி துவங்க உள்ள நிலையில் புதிதாக சரத்குமார் மகள் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்ததமாகியுள்ளார்.
ஆக்சன்
ஆனால் இந்த படத்தில் வரலட்சுமி ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் அதிரடி ஆக்ஷன் நிறைந்த ரோலில் நடிக்க உள்ளார்.
மற்ற நடிகர்கள்
மேலும் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன்,கஞ்சா கருப்பு, கோட்ட சீனிவாச ராவ், இமான் அண்ணாச்சி,வின்சென்ட் அசோகன்,இளவரசு மற்றும் சிறப்பு தோற்றத்தில் ரித்திகா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
