Saraswathi pooja release in Tamil movies

பொதுவாகவே எதாவது சாதாரண சமயங்களில் படங்கள் வெளியாவதை விட விசேஷ நாட்களில் தான் பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும்.

அந்த வரிசையில் வரும் சரஸ்வதி பூஜையின் போது ரசிகர்கள் எதிர்பார்ப்பை பெற்ற பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

அதில் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்து வரும் 'சர்வர் சுந்தரம்'. 'தனி ஒருவன்' வெற்றிக்கு பிறகு இயக்குனர் மோகன் ராஜா சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய 'வேலைக்காரன்', இயக்குனர் முருகதாஸ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கும் 'ஸ்பைடர்' ஆகிய படங்கள் பல நாட்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்த பட வரிசையில் உள்ளது.

மேலும் ஜெய் மற்றும் அஞ்சலி நடித்துள்ள திரில்லர் படமான 'பலூன்', மற்றும் இவன் தந்திரன் வெற்றிக்கு பிறகு கெளதம் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாரா ஹாரா மஹாதேவகி' ஆகிய 5 படங்கள் சரஸ்வதி பூஜை அன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.