கோலிவுட் திரையுலகில் தனக்கென மாஸ் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு உள்ள ரசிகர்கள் கூட்டத்தின் பலம்... அஜித் படத்தை பற்றி ஏதேனும் தகவல்கள் வரும் போது தான் பார்க்க முடியும்.

பொதுவாக நடிகர்களின் படங்கள் வந்தால் தான், ரசிகர்கள் பாலபிஷேகம் செய்வார்கள், ஆனால் அஜித் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானால் கூட அதற்கும் பட்டாசு வெடித்து, பாலபிஷேகம் செய்து விடுவார்கள் அஜித் ரசிகர்கள்.

இந்நிலையில் அஜித்துடன் நடித்த போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசியுள்ள நடிகை சரண்யா பொன்வண்ணன், அஜித் உண்மையில் தன்னுடைய மகன் போன்றவர் என கூறி பூரித்துள்ளார்.

மேலும் அவரிடம் யார் எது கூறினாலும் அதனை, மிகவும் அமைதியாக அமர்ந்து கேட்பார். அதே போல் ஒரு விஷயத்தில் எங்கள் இருவருக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது. நாங்கள் இருவருமே பிரியாணி செய்தால் நல்ல டேஸ்ட் வரும். அவர் ஒருமுறை அவருடைய கையாலேயே பிரியாணி செய்து எனக்கு பரிமாறினார். அதே போல் அவருக்கு ஒரு நாள் நானும் பரிமாற வேண்டும் என்கிற ஆசை உள்ளது அது இப்போது வரை நிறைவேறவில்லை என்பது சோகம்.

எப்போதும் நான் சொல்லுவதை ஒரு குழந்தை கேட்பது போல் கேட்பார் அதையெல்லாம் வைத்து பார்த்தால் அவரும் எனக்கு ஒரு குழந்தை என கூறியுள்ளார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.