கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா (Sara Tendulkar) முதல் முறையாக நடித்துள்ள விளம்பர படத்தின் வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா முதல் முறையாக நடித்துள்ள விளம்பர படத்தின் வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

லண்டலின் தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்துள்ள சாரா டெண்டுல்கர், தற்போது தனக்கு பிடித்தமான துறையை தேர்வு செய்து திறமையை வெளிப்படுத்த துவங்கியுள்ளார். ஒரு சர்வதேச ஆடை பிராண்டிற்கான விளம்பர படத்தின் மூலம் மாடலிங் உலகில் அடியெடுத்து வைத்துள்ள இவரது வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

24 வயதே ஆகும் சச்சின் மகள் சாரா, மிகவும் பிரபலமான Ajio Luxe இல் கிடைக்கும் ஆடைகளுக்கான விளம்பர படத்தில் தான் தற்போது நடித்துள்ளார். இந்த வீடியோவை கடந்த ஓரிரு தினத்திற்கு முன் சாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் கொண்டுள்ளார். இந்த வீடியோவில் இவரை தவிர, விக்ரம் மகன் துருவ் பட நாயகி பனிதா சந்து மற்றும் தானியா ஷ்ராஃப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

பனிதா சந்து 2018 ஆம் ஆண்டு வெளியான 'அக்டோபர்' என்கிற திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகி பின்னர் தமிழிலும் நடித்தவர். நடிகை, தானியா ஷ்ராஃப் ஒரு இன்ஸ்டாகிராம் செல்வாக்கு பெற்றவர் மற்றும் தொழிலதிபர் ஜெய்தேவ் ஷ்ராப்பின் மகள் ஆவார். தற்போது சாரா டெண்டுல்கர் விளம்பரத்தின் இடையில் எடுக்கப்பட்ட சில போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதில் உடலோடு ஒட்டி இருக்கும் குட்டை உடையில் செம்ம ஸ்டைலிஷாக உள்ளதை பார்க்கமுடிகிறது.

View post on Instagram

சாராவின் முதல் விளம்பர படத்திற்கு தற்போது வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. சச்சின் மற்றும் அஞ்சலி டெண்டுல்கரின் மூத்த மகளான சாரா. மும்பையில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றவர். தன்னுடை தாயை போலவே மருத்துவர் துறையை தேர்வு செய்த இவர், தற்போது மாடலிங் துறையிலும் கலக்க துவங்கியுள்ளார். தன்னுடைய 20 வயது வரை பெரிதாக கேமராவில் வெளிச்சம் படாமலேயே இருந்த சாரா தற்போது சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 1.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

View post on Instagram