பிரபல முன்னணி நடிகர் சைப் அலி கானின், மகள் சாரா அலி கான்... கடந்த வருடம் 2018 ஆம் ஆண்டு, 'கிதர்னாத்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது.  உள்ளிட்ட ஒருசில விருதுகளைப் பெற்றார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'சிம்பா' திரைப்படம் பெரிதாக வெற்றிபெறவில்லை.  இதை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாத நிலையில், தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ,Love Aaj Kal . 

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களையே மெர்சலாக்கியுள்ளது.  மேலும் இப்படத்திற்காக சாரா அலிகான் மிகவும் அர்ப்பணிப்போடு நடித்தது  டிரெய்லரில் இருந்து தெரிகிறது. மேலும் படுக்கையறை காட்சி, லிப் டூ லிப் காட்சியிலும் சாரா நடித்துள்ளார்.

இயக்குனர் இமிட்டாஸ் அலி இயக்கியுள்ள இந்த பாதை  தினேஷ் விஜின் தயாரித்துள்ளார்.  கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சாரா அலி கான் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் இதோ...