பொதுவாக, மனைவிகள் ஊருக்கு போய் விட்டால், சாப்பாடுக்கு கணவன் மார்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், தங்களுடைய நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடலாம் என்பதை நினைத்து சந்தோஷ படுவார்கள். அதே போல் மனைவி இல்லாத நேரத்தில், ஓட்டல், சினிமா என நண்பர்களுடன் அன்றய செம ஜாலியாக கழியும்.

இது போல் தான் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல நடிகர் சாந்தனு. அவருடைய மனைவி, நிகழ்ச்சி ஒன்றிற்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இதனை, 'அக்னி நட்சத்திரம்' படத்தில் இடம்பெறும் ஜனகராஜின் 'ஏன் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா' என்கிற காமெடி வீடியோவை வெளியிட்டு, ரசிகர்களிடம் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார். ரசிகர்களும் அவர்களின் மனதில் தோன்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.