'மாஸ்டர்' படம் ஆரம்பமானத்தில் இருந்தே, படம் குறித்த, அடுத்தடுத்த பல அப்டேட்டுகளை கொடுத்து வருபவர் சாந்தனு பாக்யராஜ். தற்போது நடந்து வரும் 'மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,  இந்த மேடையை கொடுத்ததுக்கு, தயாரிப்பளார் மற்றும் இயக்குனர் அனைவருக்கும் நன்றி. 

இது தான் என் முதல் படம் என்று சொல்லவேண்டும் என்பது தான் என் ஆசை, அனால் அதற்கு முன்னதாக சில படங்களை நடித்து விட்டேன். இதில் சில தோல்விகள், சில வெற்றிகள் உண்டு. ஆனால் இந்த படம் கண்டிப்பாக தன்னை மீண்டும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் என நம்புகிறேன்.

மேலும் ஒரு குட்டி ஸ்டோரி சொல்வதாக கூறிய சாந்தனு... வாழ்க்கையில் சீக்ரட் புக் என்று உண்டு. நம் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை நாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோமோ அது அப்படியே நடக்கும். அப்படி தான் இந்த ஸ்டேஜில் வந்து நிற்பதும் எனக்கு மிகவும் சீக்கிரமாகவே நடந்து விட்டது.

லோகேஷ் கனகராஜ், மாநகரம், மற்றும் கைதி ஆகிய படங்களில்  எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைத்தார் அனால் முடியவில்லை. இப்போது இந்த பெரிய ஸ்டேஜ் கொடுத்துள்ளார். 

விஜய் அண்ணாவை, தன்னுடைய சகோதரர் போல் தான் பார்க்கிறேன். அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்களை கூட ரசித்திருக்கிறேன். அனைவருக்கு திருமண வாழ்க்கை என்பது ஒன்று உண்டு, விஜய் அண்ணன் தாலி எடுத்து கொடுத்து, தன்னுடைய திருமண வாழ்க்கையை துவங்கி வைத்தவர் என,  மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.