தளபதி விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்த 'பிகில்' திரைப்படம், ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், இன்னும் திரையரங்கங்களில் ஓடி கொண்டிருக்கிறது என்பது நாம் அறிந்தது தான்.

இந்த படம் ரிலீஸ் ஆன கையோடு, இயக்குனர் லோகேஷ் கனகனாஜ் இயக்கத்தில், விஜய் தற்போது தன்னுடைய 64 ஆவது படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து முடிந்த நிலையில்.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, டெல்லியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து, ஷூட்டிங் குறித்த காட்சிகள் வெளியாகிவிட கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்புகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதே போல், குறிப்பிட்ட சிலரின் செல்போன்கள் மட்டுமே, படப்பிடிப்பு தளத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பணியாற்றும், சாந்தனு அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், விஜயின் 64 ஆவது படப்பிடிப்பு தளத்தில் இருந்து, தன்னுடைய காதல் மனைவி கீர்த்தியுடன் சேர்ந்து, ரொமான்டிக் பாடல் பாடியவாறு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வீடியோ இதோ...