தளபதி விஜய் சமீப காலமாகவே தன்னுடைய படத்தில் நடிக்க பல இளம் ஹீரோக்களுக்கும், வளர்ந்து வரும் ஹீரோயின்களுக்கும், மற்றும் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.

அந்த வகையில், 'பிகில்' படத்தில் 10 திற்கும் மேற்பட்ட நடிகைகளுக்கும், பரியேறும் பெருமாள் கதிர், போன்ற வளர்த்து வரும் நடிகர்கள் நடித்துள்ளனர். மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. 

இது ஒரு புறம் இருக்க, தற்போது விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள 64 ஆவது படம் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்த படத்தில், விஜயின் தீவிர ரசிகரும் அவரை கூட பிறந்த அண்ணனாகவே பார்க்கும் நடிகர் சாந்தனு 64 ஆவது படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் இந்த படத்தில், கல்லூரி பேராசிரியராக நடிக்க உள்ளதாகவும், கல்லூரி மாணவராக சந்தனு நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 64 ஆவது படத்தில் சந்தனுவிற்காக, விஜய் சிவாரிசு செய்தாரா என்கிற கேள்வியும் எழுந்தது.

எது எப்படி இருந்தாலும், பல வருடங்களாக வெற்றி படத்தை கொடுக்க போராடி வரும், சந்தனுவிற்கு இந்த படம் சிறந்த படமாக அமைய வேண்டும் என வாழ்த்துக்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.