கொரோனா பரபரப்பால் ஊரே, ஊரடங்கால் அடங்கி இருக்கும் நிலையில், தினம் தோறும் புது புது ஹாஷ்டாக் பயன்படுத்தி, தல மற்றும் தளபதி ரசிகர்கள் முட்டி மோதி கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து பிரபலங்கள் பலரும் கூட தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தளபதி விஜய்யை சகோதராகவும், ரசிகராகவும் பார்க்கும், மாஸ்டர் பட நடிகர் சாந்தனு, ஓயாமல் சண்டையை வளர்த்து வரும் இருதரப்பு ரசிகர்களுக்கும் ஒரே விஷயத்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... ‘இங்க நான் ஒண்ணும் பஞ்சாயத்து பண்ண வரல்ல.... அது என் வேலையும்  கிடையாது. ஆனால் இருதரப்புக்கும் என்னால் முடிந்தது இது ஒன்று தான். 

தளபதி ரசிகர்கள் இந்த ட்ரோல்லை முதலில் ஆரம்பித்து இருந்தால், தல ரசிகர்கள் தயவு செய்து அதனை கண்டுகொள்ளாமல் மறந்துவிடுங்கள். அதேபோல் ஒருவேளை தல ரசிகர்கள் ஆரம்பித்து இருந்தால், தளபதி ரசிகர்கள் அதனை கண்டுகொள்ளாமல் மறந்துவிடுங்கள். பதிலுக்கு பதில் கூறினால் பிரச்சனை வளர்ந்து கொண்டேதான் போகும்’ அது இருவரின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்பது போல் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

தல - தளபதி என இருதரப்பு ரசிகர்களுக்கும் பிரச்சனை முற்றி போய் உள்ளதால், இருதரப்பும் தற்போது யார் சொல்வதையும் கேட்காமல்... இஷ்டத்துக்கு தங்களுடைய கமெண்டுகளை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.