Asianet News TamilAsianet News Tamil

இதுவரை பார்த்திடாத புதிய கெட்டப்பில் சந்தானம்..! சுட சுட வெளியான சூப்பர் தகவல்!

சந்தானம் தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில், நடித்துள்ள 'பிஸ்கோத்து' படம் பற்றிய புதிய தகவலை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 

santhanam new poster and biskoth movie update released
Author
Chennai, First Published Jul 22, 2020, 5:06 PM IST

சந்தானம் தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில், நடித்துள்ள 'பிஸ்கோத்து' படம் பற்றிய புதிய தகவலை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்கத்தில், தற்போது சந்தானம் இணைந்து நடித்து வந்த திரைப்படம் 'பிஸ்கோத்து'.  இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் மாறி மாறி நடந்து வந்தது.

santhanam new poster and biskoth movie update released

இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தாரா அலிஷா பெர்ரி, இவர் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியான, A1 படத்தில் கதாநாயகியாக நடித்தவர். மற்றொரு நாயகியாக ஸ்வாதி முப்பாலா என்பவர் அறிமுகமாக உள்ளார். 

தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் மீண்டும் துவங்கியதால் அந்த பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை பார்த்திடாத, மஹாராஜா கெட்டப்பில் சந்தானம் இந்த படத்தின் போஸ்டரில் உள்ளார்.

santhanam new poster and biskoth movie update released

கடந்த மே மாதம், சந்தானம் எழுத்தாளரும் புதுமுக இயக்குநருமான கார்த்திக் யோகி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட் உருவாகி திரைப்படம் “டிக்கிலோனா”. படத்தின் இருந்து மூன்று வித்தியாசமான போஸ்டர்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios