நடிகர் சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு' இரண்டாம் பாகத்தின் டீசர் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு' இரண்டாம் பாகத்தின் டீசர் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் நண்பர்களான இயக்குனர் ராம்பாலாவுடன், சந்தானம் இணைந்த படம் தில்லுக்கு துட்டு. சந்தானத்தை முதிர்ச்சியான ஹீரோவாக மாற்றிய படம் தில்லுக்கு துட்டு என்று சொல்லும் அளவுக்கு சந்தானத்தின் நடிப்பு பேசப்பட்டது. திகில் மற்றும் காமெடி கலந்த படமான தில்லுக்கு துட்டு 2016ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்ததுடன் வசூலையும் வாரிக் குவித்தது.

ஆனந்த்ராஜ், நான் கவுடள் ராஜேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர். இதன் பின்னர் சந்தானத்திற்கு சொல்லிக் கொள்ளும் படியாக படம் வெளியாகவில்லை.
செல்வராகன் இயக்கத்தில் நடிக்கும் மன்னவன் வந்தானடி படமும் நிதிப் பிரச்சனையால் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் சந்தானம் மீண்டும் ராம்பாலாவுடன் இணைந்துள்ளார். தில்லுக்கு துட்டுவின் இரண்டாம் பாகமாக இது உருவாகி வருகிறது. படத்தை சந்தானமே தயாரிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த ஷிர்தாஸ் சிவதாஸ் என்ற பெண் இப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். படத்தின் முக்கிய பகுதி, நடிகையை சார்ந்தே இருப்பதால், அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற பெண்களை நடிக்க வைத்து ஒத்திகை பார்த்துள்ளது படக்குழு.

இப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், ஊர்வசி, ஜில் ஜங் ஜக் படத்தில் நடித்த பிபின், கலக்கப் போவது யாரு மூலம் புகழ்பெற்ற ராமர், தனசேகர் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் கிராபிக்ஸ் கலந்த புகைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் சந்தானம் கதவை திறந்து பார்ப்பதும், அப்போது, பேய் வேடமிட்ட இரு பெண்கள் ஒளிந்திருப்பது போன்றும் உள்ளது. எனவே முதல் பாகத்தைப் போலவே இதிலும் திகிலுக்கும், காமெடிக்கும் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் டீசர் திங்கள் கிழமை அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
