சந்தானம் இயக்குனர் ஜாக்சன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்துள்ள 'பாரீஸ் ஜெயராஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’ஏ1’, திரைப்படத்தின் இயக்குனர் ஜாக்சன் இயக்கத்தில், மீண்டும் இணைந்து சந்தானம் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். 'ஏ 1 '  படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே மீண்டும் இந்த கூட்டணி இணைய முடிவு செய்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

’பாரீஸ் ஜெயராஜ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சந்தானம் பாடகராக நடிக்கிறாரோ என்கிற சந்தேகத்தை வரவைத்துள்ளது ஃபர்ஸ்ட்  லுக். ஜொலிஜொலிக்கும் சீரியல் லைட், ஸ்பீக்கர் முன்பு அமர்ந்து மைக்கில் சந்தானம் பாடுவது போல் இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில், துரைராஜ் கலை இயக்கத்தில், பிரகாஷ் மாபு படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாக இருப்பதாக ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது