தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தில்லுக்கு துட்டு' இரண்டாம் பாகம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

தற்போது 'அக்கியூஸ்ட் நம்பர் 1 'என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி, ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், சந்தானம் அவருடைய செல்ல மகளுடன் சேர்ந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி', படத்தில் பேசிய காமெடி வசனந்த்தை, மகளுடன் டப்மேஷ் செய்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பல ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரசிகர்கள் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சர்யப்பட்டு போகிறார்கள்.