நடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருந்த போது, வருடத்திற்கு பத்து படங்களுக்கு குறையாமல் நடித்தார். ஆனால் இவர் ஹீரோவாக மாறிய பின், வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாவதே கடினமாக உள்ளது. 

நடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருந்த போது, வருடத்திற்கு பத்து படங்களுக்கு குறையாமல் நடித்தார். ஆனால் இவர் ஹீரோவாக மாறிய பின், வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாவதே கடினமாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்த ஆண்டு, இவர் நடிப்பில் தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இவர், இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் நடித்துள்ள 'A1 ' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஜூலை 26ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக, தாரா அலிஷா என்கிற நடிகை நடித்துள்ளார். மேலும் மொட்டை ராஜேந்திரன் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சர்க்கிள் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.