சென்னைக்கு  வரும் “சன்னி லியோன்

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கடந்த 3 நாட்களுக்கு முன், கேரளாவில் உள்ள கொச்சிக்கு  வந்திருந்தார். அவரை காண மாபெரும் ரசிகர் பட்டாளம் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து  தற்போது கவுதம் கார்த்திக் நடித்து வரும் ‘இந்திரஜித்’ படத்தில் குத்தாட்டம் போடுவதற்காக நடிகை சன்னி லியோன் சென்னை வருவதாக தகவல் வெளியாகி  உள்ளது.

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் மகன் கலா பிரபு  இயக்கி வரும் “இந்திரஜித்’ படத்தில்  இடம்பெறும் ஒரு பாடலுக்கு  குத்தாட்டம் போடுவதற்காக சன்னி லியோன் சென்னை வர உள்ளார்.

மேலும் இந்த பாடல் காட்சிகள் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைப்பெற உள்ளதாக  செய்திகள் வெளியாகி  உள்ளது. எனவே சன்னி  லியோன் சென்னைக்கு வருகை புரிந்தால்  ரசிகர்கள் கூட்டம்  அலைமோதக்கூடுமோ என சினி வட்டாரம்  பேசி வருகிறது