sanjitha shetty about the sexy photos

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் பல முன்னணி நடிகைகளை ஆபாச புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிட பட்டு வருவது.

ஒட்டுமொத்த திரையுலகினரையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படி வெளியிடப்படும் புகைப்படங்கள் உண்மையானவையா அல்லது மார்பிங் செய்ததா என்பது தெரியாத வகையில் உள்ளது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் அந்த ஆபாச புகைப்பட பட்டியலில் இடம்பிடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி இது குறித்து தன்னுடைய விளக்கத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். ஒரு கூறுகையில்..

நேற்று முதல் தன்னை பற்றிய சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும், இதுகுறித்து தன்னுடைய அன்பான ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கடமை தனக்கு இருப்பதாகவும் கூறிய சஞ்சிதா, 'அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை' என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து தனக்கு ஆதரவு அளித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தனது நன்றிகள் என்றும் சஞ்சிதா ஷெட்டி கூறியுள்ளார்.