sangamitha producer reject actress hanshika

இயக்குனர் சுந்தர் சி யின் கனவு படமான, சங்கமித்ரா திரைப்படத்தின் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, வால் சண்டை முதற்கொண்டு கற்று வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இவருக்கும் படக்குழுவினருக்கு ஒரு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்த படத்தை விட்டு முழுமையாக விலகுவதாக அறிவித்தார் ஸ்ருதிஹாசன் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் படக்குழுவினர் ஸ்ருதிஹாசனுக்கு பதில் மற்றொரு நடிகையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, ஏற்கனவே சுந்தர் சி யின், 'தீயா வேலை செய்யணும் குமாரு' , 'அரண்மனை', 'அரண்மனை 2 ' ஆகிய படங்களில் நடித்த ஹன்சிகாவை நடிக்க வைக்கலாம் என தயாரிப்பாளரிடம் சுந்தர் சி கூறியபோது, அந்த நடிகைக்கு தற்போது மார்க்கெட் சரிந்து விட்டது அதனால் அந்த நடிகையை மட்டும் நடிக்க வைக்க வேண்டாம் என கூறிவிட்டார்களாம்.

இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.