Asianet News TamilAsianet News Tamil

காதல் மன்னன் கவினை வில்லு பாட்டு பாடி கலாய்த்த சாண்டி! லாஸ்லியா என்ன செஞ்சாங்க தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஒரு பக்கம், கவின் - லாஸ்லியா காதல் வளர்ந்து கொண்டே இருந்தாலும், மற்றொரு புறம், போட்டியாளர்கள் அனைவரும் தீவிரமாக, நாட்டுப்புற கலைகளை கற்று வருகிறார்கள்.
 

sandy kidding kavin in villu pattu task
Author
Chennai, First Published Aug 29, 2019, 2:53 PM IST

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஒரு பக்கம், கவின் - லாஸ்லியா காதல் வளர்ந்து கொண்டே இருந்தாலும், மற்றொரு புறம், போட்டியாளர்கள் அனைவரும் தீவிரமாக, நாட்டுப்புற கலைகளை கற்று வருகிறார்கள்.

அந்த வகையில், நேற்றைய முன் தினம் பொம்மலாட்டம், நேற்று கூத்து ஆகியவற்றை கற்று கொண்டது மட்டும் இல்லாமல், கற்று கொண்டதை  செய்தும் காட்டினார். இன்றைய தினம், வில்லுப்பாட்டு இவர்களுக்கு சொல்லி கொடுக்கப்படுவது இன்றைய தினம் வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரிகிறது. 

sandy kidding kavin in villu pattu task

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ காட்சியில், வில்லுப்பாட்டு டாஸ்க்கில் சாண்டி, முகின், லாஸ்லியா, வனிதா ஆகியோர் வில்லுப்பாட்டு ஒன்றை பாடி அசத்துகின்றனர்.

sandy kidding kavin in villu pattu task

குறிப்பாக கவினை கலாய்க்கும் விதத்தில், கவின் தான் காதல் மன்னன் என சாண்டி கூற, அதனை மீண்டும் மீண்டும் அழுத்தி கூறி கலாய்க்கிறார் முகேன். அப்போது லாஸ்லியா, வெட்கத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios