அண்மையில் முடிந்த பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ரசிகர்கள் உட்பட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடன இயக்குநர் சாண்டி. 
இந்த சீசனில் ஆரம்பம் முதலே தனது நகைச்சுவை உணர்வாலும், எம்.ஜி.ஆர். மற்றும் பெண் போன்று வேடமணிந்தும், குழந்தை போல் நடித்தும், கவினுடன் இணைந்து கானா பாடல்களை பாடியும் அனைவரையும் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தார் சாண்டி. 

அத்துடன், கவினுடன் சேர்ந்து 'வி ஆர் த பாய்ஸ்' என்ற கேங்கையும் உருவாக்கி, அதில் தர்ஷன், முகின் மற்றும் லாஸ்லியாவுடன் இணைந்து அவர் பாடிய பாடல், சொன்னை கதைகள், போட்ட ஆட்டமெல்லாம் செம ட்ரெண்டிங் எனலாம். 

இதன்மூலம், நடன இயக்குர் மட்டுமின்றி பன்முகத் திறமை கொண்ட கலைஞராகவும் அறியப்பட்ட சாண்டி, போட்டியாளர்கள் மட்டுமின்றி அனைவராலும் கொண்டாடப்பட்டார். 

குறிப்பாக குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது பல திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிவரும் அவர், நடன பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கூறிய கதையின் மூலம் புகழ்பெற்ற சாண்டி மேனாக வலம்வரும் சாண்டியுடன், பிரபல PRO நிகில் இணைந்துள்ளார். இவர், திரைப்படங்களிலும், பிரபல நடிகர், நடிகையருக்கும் மக்கள் தொடர்பு அலுவலராக  பணியாற்றிவருகிறார். இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நிகில், விரைவில் சூப்பரான ஒரு அறிவிப்பு வரும் என்றும் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டியின் திறமையை பார்த்து ரசித்த கமல்ஹாசனே, சிலாகித்து சாண்டியை பலமுறை பாராட்டியிருந்தார். 

சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடிவரும் என்றும் சாண்டியிடம் அவர் கூறியிருந்தார். அதற்கேற்றார் போல், நிகிலின் அறிவிப்பும் சாண்டி சினிமாவில் நடிப்பதற்கான அறிவிப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்