தனது உடலுள்ள ஒரு கட்டியை அகற்றுவதற்காக ஆபரேஷன் நடக்கவிருப்பதாகவும் தனக்காக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துகொள்ளும்படியும் பிக்பாஸ் தர்ஷனின் காதலியும் நடிகையுமான சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார்.

‘அம்புலி’,’கதம் கதம்’,’சவாரி’உள்ளிட்ட தமிழ்ப் படங்களின் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சனம் ஷெட்டி, ‘பிக்பாஸ்’தர்ஷனின் காதலி என்கிற தகவல் பரவிய பிறகே மிகவும் பிரபலமானார். தாங்கள் இருவரும் காதலிப்பதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனும் உறுதி செய்தார். நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவுடன் தர்ஷன் சந்தித்த முதல் நபரே சனம் ஷெட்டிதா என்கிற அளவுக்கு அவர்களுக்கு நெருக்கம் இருந்தது. இன்று காலை அச்சந்திப்பு குறித்து பதிவிட்டிருந்த சனம் ஷெட்டி, ...பிக்பாஸ் தர்ஷன் விவகாரத்தில் மிகவும் பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளார். தர்ஷன் வின்னராக வெளியே வரவேண்டியவர். 98 நாட்களுக்கு அப்புறம் வெளியேறிய பின்னர் உன்னுடன் சேர்ந்து நான் எடுத்துக்கொண்டிருக்கும் இப்படம் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.ஆனாலும் இன்னும் உனக்கு வாழ்க்கையில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன தர்ஷன்’என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இன்று நண்பகல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் அதிர்ச்சி பதிவொன்றை வெளியிட்டுள்ள சனம் ஷெட்டி,...மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''டியூமர் பற்றி சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது அதனால்  சர்ஜரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். நான் செய்யும் அறிவுரை என்னவென்றால் உங்கள் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை சம்பந்தபட்ட விஷயங்களை அலட்சியப்படுத்தாதீர்கள். எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே என்று பதிவிட்டுள்ளார்.