தந்தைக்கு கொரோனா... சமூக வலைத்தளத்தில் ரெம்டிசிவிர் மருந்துக்காக உதவி கேட்ட நடிகை!

பிரபல நடிகை ஒருவர், தன்னுடைய பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவருக்கு ரெம்டிசிவிர் மருந்து தேவை என தனது சமூக வலைதளம் மூலம் உதவி கேட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
 
samyuktha hedge requesting help for medicine

பிரபல நடிகை ஒருவர், தன்னுடைய பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவருக்கு ரெம்டிசிவிர் மருந்து தேவை என தனது சமூக வலைதளம் மூலம் உதவி கேட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த இவர், இதை தொடர்ந்து, ஜிவி பிரகாஷ் நடித்த 'வாட்ச்மேன்', 'பப்பி' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். 

samyuktha hedge requesting help for medicine

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவு வரும் நிலையில், இவருடைய தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், இவருக்கு ரெம்டிசிவிர் மருந்து தேவை என்றும், தனக்கு தெரிந்தவர்களிடம் மருந்தை கேட்டுள்ளதாகவும் அந்த மருந்தை கிடைக்க உதவி செய்யவும் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது தந்தை மற்றும் தாய் வீட்டில் வைத்து சிகிச்சை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

samyuktha hedge requesting help for medicine

அதே போல் இந்த இக்கட்டான நிலையில் 100 நம்பருக்கு கால் செய்ததாகவும் ஆனால் அந்த நம்பர் சுவிட்ச் ஆப்பில் இருப்பதாகவும் எனவே தயவு செய்து தனக்கு ரெம்டிசிவிர் மருந்து கிடைக்க உதவி செய்யவும் என்றும், கோரிக்கை வைத்துள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்து, ரசிகர்கள் மற்றும் பலர் உதவுவதாக தெரிவித்து அதற்கான தகவல்களையும், சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து தங்களுடைய உதவி மனப்பான்மையை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

samyuktha hedge requesting help for medicine

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios