பிரபல இயக்குனர், நடிகர், என பல்வேறு திறமைகளை கொண்ட சமுத்திரக்கனி சமூகநல அக்கறையுடன் படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 'அப்பா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் நேற்று வெளியான 'பாகுபலி 2' படத்தை பார்த்து விட்டு   தனது சமூக வலைத்தளத்தில் சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார். 

அதில் 'இந்த படைப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எவனாவது அப்படி இப்படின்னு கருத்து சொல்ல வாயை தொறந்தா, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன் என ஆவேசமாக கூறியுள்ளார். 

மேலும் பாகுபலி உலக சினிமா' என்று கருத்து என்று கூறி , 'ராஜமெளலி, நீதானய்யா கலைஞன், இந்த படத்தை 100 முறை பார்க்கலாம், பார்க்கணும். உத்தமமான படைப்பு. 5 வருட தியானம். இந்த படத்துக்கு யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். என் தமிழ் சொந்தங்களே, அனுபவிங்க... என்று கூறியுள்ளார்.

'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி முழுதாக ஒருநாள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எந்த ஊடகமும், சமூக வலைத்தள பயனாளிகளும், திரைப்பட விமர்சகர்களும் நெகட்டிவ் விமர்சனம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருவேளை நெகட்டிவ் விமர்சனம் தருபவர்களை வீடு தேடி போய் அடிப்பார் சமுத்திரக்கனி.