8 மாத கர்ப்பிணியாக  இருக்கும் பிரபல நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கலாய்த்தவரை, லாக் அவுட் செய்துவிட்டு தெறித்து  ஓடவிட்டுள்ளார் சமீரா.

பிரபல நடிகை சமீரா ரெட்டி,  இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர் தனது  கணவன் மற்றும் மகனுடன் கோவாவுக்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரையோரம் போட்டோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் அவரின் அழகை பாராட்டியிருந்தார்கள். ஆனால், சிலர் மேடம் கர்ப்பணியாக இருந்து கொண்டு இப்படி உடை அணிய வெட்கமாக இல்லையா, இப்படியா வயிற்றை காட்டுவது? என சமீராவின் கோபத்தை தூண்டும் விதமாக கேட்டிருந்தனர், நெகட்டிவ் கமெண்ட்டுகளால் டென்ஷானான சமீரா அவர்களுக்கு திருப்பி கொடுக்க முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து மற்றொரு, படு ஹாட் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விட்டு பதிலடி கொடுத்துள்ளார். 

சமீரா தன் வயிறை பெருமையாக காட்டுவதை பார்த்து திட்டியவர்களுக்காகவே இப்படி ஒரு போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார். சமீரா கர்ப்ப காலத்தில் என்ன உடை அணிய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. தனது செக்சியான ஆடை தன்னுடைய கணவருக்கே பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும் போது நெட்டிசன்கள் சமீரா ரெட்டியை கிண்டல் செய்வதும், கடுமையாக விமர்சிப்பதும் தவறு. பிரசவம் நெருங்கும் நேரத்தில் சமீராவுக்கு இந்த நெட்டிசன்களால் தேவையில்லாத மனஉளைச்சலில் உள்ளார் எனக் குறிப்பிடத்தக்கது.