‘பெண்கள் விஷயத்தில் ஆண்கள் எப்போதும் மிகவும் தவறானவர்களாகவே இருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட சில நடிகர்கள் என்னைக் கட்டிலுக்கு அழைத்தனர்’ என்று அதிர்ச்சியளிக்கிறார் பிரபல நடிகை சமீரா ரெட்டி.

2002ல் ‘மைனே தில் துஜ்கோ தியா’ இந்திப்படத்தின் மூல அறிமுகமான சமீரா ரெட்டி மேலும் பல இந்திப்படங்களில் நடித்துவிட்டு 2008ல் கவுதம் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்து அஜீத்துடன் ‘அசல்’ மீண்டும் கவுதமுடன் ‘நடு நிசி நாய்கள்’ படங்களில் நடித்துவிட்டு 2013ம் ஆண்டோடு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அக்‌ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். 

ஏற்கனவே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்ட சமீரா தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் வட இந்திய இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், ‘நான் திரைப்பட உலகை விட்டு ஏன் வெளியேறினேன் என்பதைத் தெரிந்து கொள்ள ஒருவர் கூட ஆர்வம் காட்டவில்லை. இந்தத் திரையுலகமே இப்படித்தான் என்று எடுத்துக்கொண்டேன்.

இங்கே பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பான சூழ்நிலை இருந்ததே இல்லை. என்னைப் பலமுறை நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன், நான் கர்ப்பமாக இருந்தது தெரிந்தபோது கூட அழைத்திருக்கிறார்கள். அந்த சூழ்நிலை மாறினால் நன்றாக இருக்கும். ஆனால் அது மிக மிக மெதுவாகத்தான் நடக்கும்’ என்று கவலை தெரிவித்திருக்கிறார் சமீரா ரெட்டி.