யோகா தினம், ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டதை தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர், தங்களுடைய யோகா செய்யும் புகைப்படத்தை பதிவு செய்து, யோகா செய்வதன் நன்மையை எடுத்து கூறி வந்தனர்.

யோகா தினம், ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டதை தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர், தங்களுடைய யோகா செய்யும் புகைப்படத்தை பதிவு செய்து, யோகா செய்வதன் நன்மையை எடுத்து கூறி வந்தனர். அந்த வகையில் நடிகை சமந்தா தன்னுடைய நாயுடன் செய்துள்ள யோகா, புகைப்படம் வைரலாகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கொரோனா பிரச்சனையின் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கில், சமையல் மற்றும் வீட்டில் முட்டைகோஸ், மற்றும் கீரைகள் போன்றவற்றை வளர்த்து, அறுவடை செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் அவ்வபோது, சமந்தா வெளியிட்டு வருவதும், இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருவதும் அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் நடிகை சமந்தா உட்கார்ந்தபடி கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்துவரும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில், ஒரு புகைப்படத்தில், சமந்தாவின் சமந்தா எப்படி கண்ணை மூடியுள்ளாரோ அதே போல், அவர் செல்லமாக வளர்த்து வரும் நாய் குட்டியும் கண்ணை மூடி உள்ளது. 

இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த கிளிக், லைக்குகளை அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.