நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை, கடந்த 2017 ஆம் ஆண்டு, காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான '96 ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் விஜய் சேதுபதியுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

அதே நேரத்தில், குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அவர் மறந்து இல்லை. நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பின், அடிக்கடி திருப்பதி ஏழுமலையால் கோவிலுக்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் சமந்தா.

அதன் படி, தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பாதயாத்திரையாக கோவிலுக்கு நடந்ததே சென்றுள்ளார் சமந்தா. அவரை பின் தொடர்ந்து சில ரசிகர்களும் சென்றுள்ளனர். அதில் ஒரு ரசிகர், சமந்தாவை வீடியோ எடுத்து கொண்டே சென்றார். இவரின் செயலால் உச்சகட்ட கோபத்திற்கு ஆளான சமந்தா, அவரை எச்சரிக்கும் விதமாக, நடந்த ஒழுங்கா நட... இந்த போட்டோ வீடியோ எடுக்குறதுலாம் வேண்டாம் என எச்சரித்துள்ளார். இது குறித்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.