அனைத்து மொழி திரையுலகிலும், மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது தேசிய விருது.   இந்த ஆண்டு தேசிய விருது பட பட்டியலில் நடிகை சமந்தா நடித்த இரண்டு படங்கள் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிது.

நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதற்கும் திருமணம் தடை இல்லை என்பதை நிரூபித்து, தனக்கான வெற்றி பாதையில் பயணித்து வருபவர் பிரபல நடிகை சமந்தா.

இவர் நடித்த இரண்டு படங்கள், அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ள தேசிய விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இவர் நடிகர் ராம்சரண் தேஜாவுடன் இணைந்து நடித்த ரங்கஸ்தலம், மற்றும் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி வேடத்தில் நடித்த மகாநடி, ஆகிய இரண்டு திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது.  மகாநடி படத்திலும் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.