விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் வெளியான "96" திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. ஓவர் ரொமான்ஸ், மரத்தை சுற்றி ஓடும் காதல் பாடல்கள், அதிரடி சஸ்பென்ஸ் என எந்த ஒரு கமர்ஷியல் வகையாறாக்களும் இல்லாமல், நிறைவேறாத பள்ளி பருவ காதலை அழகாக வர்ணித்தது. தமிழில் இந்த படத்தை இயக்கிய பிரேம்குமார், தெலுங்கில் இதே கதையை ''ஜானு'' என்ற ரீமேக் செய்துள்ளார்.  

அதில் ராம் கதாபாத்திரத்தில் சர்வானந்தும், ஜானு கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. அதனை பார்க்கும் போதே  ''96 '' படத்தின் கதையை மாற்றாமல் அப்படியே தெலுங்கில் எடுத்துள்ளது தெரிகிறது. சமந்தாவின் நடிப்பை தெலுங்கு ரசிகர்கள் புகழ்ந்து வரும் அதே சமயத்தில் நெட்டிசன்கள் பலரும் த்ரிஷா நடிப்புடன் கம்பேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். 

சர்வானந்தை விஜய்சேதுபதியுடன் ஒப்பிட்டு கலாய்த்து வரும் நெட்டிசன்கள், சமந்தாவையும் விட்டுவைக்கவில்லை. த்ரிஷா போன்ற சிரிப்பு, அழுகை சமந்தாவிடம் இல்லை என்று கமெண்ட் செய்துள்ளனர். சிலரோ "96" படத்தில் இருந்த லவ் ஃபீலிங் ஜானுவில் மிஸ் ஆகிறது என்று வேதனை தெரிவிக்கின்றனர். 

இது எல்லாம் கூட பரவாயில்லை, சில நெட்டிசன்களோ த்ரிஷா, சமந்தா  நடிப்பை ஒப்பிட்டு மீம்ஸ்களை கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். இதனால் கடுப்பான சமந்தா, "96" படம் ஏன் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

அதில்,  த்ரிஷாவின் சிறப்பான நடிப்பை அப்படியே காப்பி அடிக்க கூடாது என்று முடிவு செய்து இருந்தேன். அப்படி செய்திருந்தாலும் அது வொர்க் அவுட் ஆகி இருக்காது. ஜானு ஒப்பீட்டிற்காக எடுக்கப்படவில்லை. அந்தப் படம் குறித்து அதிக மக்கள் உணரவேண்டும் என்பதற்காக தான் எடுக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் "96", "ஜானு" படத்தை கம்பர் செய்ய வேண்டாம் என நச்சுன்னு பதிலளித்துள்ளார் நம்ம சமந்தா.