தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன நாகார்ஜுனா வின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் இவர் நடிப்பை தொடர்ந்து வருகிறார். அண்மையில் இவர் நடித்து வெளியான யூ டர்ன் திரைப்படம் ஹிட் ஆனது. திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் நாக சைதன்யா சமந்தா  ஜோடி ஸ்பெயின் நாட்டிலுள்ள இபிசா என்ற தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளது.  அங்கு நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்களின் கடும் எதிர்ப்புக்கும் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. சமந்தாவின் instagram பக்கத்தில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சிவப்பு வண்ண பிகினி உடை அணிந்துள்ள சமந்தா கடற்கரையை பார்த்தபடி போஸ் கொடுக்கிறார். இந்த ஆடை அரைகுறையாக இருப்பதால் சமந்தா படுகவர்ச்சியாக தோன்றுகிறார். இது சில ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

அக்கினேனி குடும்பத்திற்கு சமந்தா கெட்ட பெயரை வாங்கி கொடுப்பதாகவும், கவர்ச்சி கிளாமர் தேவை என்றால் எதற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது ஆத்திரத்தை பதிவு செய்து வருகின்றனர். பெயரும் பணமும் மட்டுமே தேவை என்று சமந்தா நினைப்பதாகவும் அவர் மனைவியாக இருப்பதற்கே தகுதி இல்லாதவர் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விமர்சனங்கள் சமந்தாவிற்கு கடும் போகத்தை வரவழைத்துள்ளது.

 ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் மற்றொரு புகைப்படத்தை சமந்தா பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படத்தில் நடு விரல் மட்டும் உள்ளது. பொது இடங்களில் நடுவிரலை காட்டுவது என்பது மேற்கத்திய கலாச்சாரத்தில் ஆபாசமான சைகை ஆகும். நடுவிரலை காட்டுவது என்பது கோபத்தை வெளிப்பாடு என்றாலும் அதற்கு பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன.
 
 அதிலும் ஒரு பெண் ஆணை நோக்கி நடுவிரலை காட்டுகிறார் என்றால் அதற்கு மேற்கத்திய கலாச்சாரத்தில் மிகவும் ஆபாசமான ஒரு செயலை அர்த்தமாக கூறுகின்றனர். ரசிகர்கள் ஆபாசமாக பேசிய நிலையில் சமந்தாவும் அவர்களுக்கு ஆபாசமாகவே பதிலடி கொடுத்துள்ளது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.