நடிகை சமந்தா, நடிப்பில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தி வருகிறாரோ அதே போல், தன்னுடைய உடலை பிட்டாக வைத்து கொள்வதிலும் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார். 

வெளிநாடுகளுக்கு சென்றாலும், கணவருடன் சேர்ந்து ஜிம்முக்கு போய், ஓர்கவுட் செய்ய தவறுவது இல்லை. மேலும் அவ்வப்போது, ஜிம்மில் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது, சமந்தா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம், ரசிகர்களை வாயடைத்து போக வைத்துள்ளது. அதில் அப்படி என்ன ஸ்பெஷல் என நினைக்கிறீர்களா? சாதாரணமாக ஏதோ சுவர் மீது சாய்ந்து கொண்டு தலைகீழாக நிற்பதே கஷ்டம். ஆனால் சமந்தா தன்னுடைய இரண்டு கைகளை தரையில் ஊன்றி, தலைகீழாக நிற்கிறார். சமந்தாவின் இந்த அபார திறமையை பார்த்து தான் வாய்யடைத்து போய் உள்ளனர் ரசிகர்கள். 

 

இது போன்ற கடின உடல் பயிற்சிகள் தான், உங்களின் அழகிற்கு காரணமா? என்றும் ரசிகர்கள் பலர் சமந்தாவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு சமந்தா என்ன பதில் சொல்வார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அந்த புகைப்படம் இதோ..