Samantha shared fans video : திரையரங்குளில் வெளியனா புஷ்பா படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் அங்கு சமந்தா பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர். 

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்த படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். 

இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இப்படம் டிசம்பர் 17-ந் தேதி ரிலீசானது.முன்னதாக சமந்தா (Samantha) கவர்ச்சி நடனம் ஆடிய பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடி உள்ளார். ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்பாடல், தற்போது சர்ச்சையிலும் சிக்கியது.

 இந்த பாடல் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து மிகவும் இழிவாக எழுதப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இப்பாடலை தடை செய்ய வேண்டும் அல்லது இப்பாடல் வரிகளை மாற்ற வேண்டும் எனக் கோரி ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுள்ளது.

ஆனால் இந்த பாடலுக்கு ரசிகர்களின் வரவேற்பு தாறுமாறாக உள்ளது. திரையரங்குளில் வெளியனா புஷ்பா படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் அங்கு சமந்தா பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர். இந்த வீடியோக்களை சமந்தா தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

View post on Instagram

View post on Instagram