பாணா காத்தாடி படத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இந்த படத்தை தொடந்து தமிழ், தெலுங்கு, படங்களில் நடிக்க துவங்கினார். இவர் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெறவே, தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான இரும்புத்திரை, யூ டர்ன் ஆகிய படங்கள் வெற்றி பெற்றதோடு வசூலிலும் கலக்கியது.  சமீபத்தில்  சூப்பர் டீலக்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திருமணத்திற்குப் பிறகும் மார்க்கெட் குறையாமல் தமிழ், தெலுங்கு, என  தொடர்ந்து நடித்து வருகிறார். கணவர் நாக சைதன்யாவுடன் இவர் நடித்த மஜிலி, திரைப்படம்  2 வாரத்துக்கு முன்பு திரைக்கு வந்த நல்ல லாபம் பார்த்தது.

இந்நிலையில் மன்மதடு-2 என்ற படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க சமந்தாவை அணுகியபோது,  இதுவரை ரூபாய் 2 கோடி சம்பளம் கேட்ட சமந்தா தற்போது  3 கோடியாக உயர்த்தி கேட்டதாகவும் அந்த தொகையை கொடுத்து சமந்தாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதுபோல் மற்ற படங்களில் நடிக்கவும் இனி பேரம் எல்லாம் கிடையாது இது தான் சம்பளம் என கூறுகிறாராம் சமந்தா.