தனது கணவர் நாக சைதன்யா என்ன சொல்கிறாரோ அதன்படி நடந்து கொள்வதாகவும், அவரது அறிவுரையை பின்பற்றுவதாலும் தான் மிகுந்த சந்தோஷமாக இருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டு விடுவார்கள் அல்லது நடிப்பதைர குறைத்துக் கொள்வார்கள். ஆனால் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த கொண்டபின், நடிகை சமந்தா ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்  ராம் சரண் தேஜாவுடன்  நடிகை சமந்தா நடித்து அண்மையில் வெளிவந்த ரங்கஸ்தலம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. படம் வெளியிடப்பட்ட 2 நாட்களில் 100 ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இந்த வெற்றி குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ள நடிகை சமந்தா,  தனது கணவர் நாக சைதன்யாவின் அறிவுரைகளைக் கேட்டு நடந்து கொள்வதால் மனநிறைவுடனும், சந்தோஷமாகவும் இருப்பதாக கூறினார்.

ஒவ்வொரு படத்திலும் 100 சதவீதம் உழைக்க வேண்டும், படத்தின் ரிசல்ட் நம் கையில் இல்லை அது ரசிகர்கள் கையில்தான் என்று கணவர் சைதன்யா கூறுவதைக் கேட்டு அப்படியே நடந்து கொள்கிறேன் என சமந்தா கூறினார்.

தோல்விகளை எதிர்கொள்வது எப்படி ?  என்பதை என் கணவரிமே கற்றுக் கொள்கிறேன் என்றும், அவரது சொல்படி நடந்து கொள்வதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.