நடிகை சமந்தாவின் திருமணம் அடுத்த வருடம் நடக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் அவரது காதலன் நயசைத்தன்யா அவருக்கு ஆசையாக ஒரு விலை உயர்த்த மோதிரம் வாங்கி கொடுத்தாராம்.

அதனை மிக அலட்சியமாக தனது வீட்டில் கழட்டி வைத்துள்ளார் சமந்தா, சில நாட்கள் சென்று அந்த மோதிரத்தை தேடிய போது அது காணாமல் போய் இருப்பது அவருக்கு தெரிந்தது.

அந்த மோதிரத்தை கண்டிப்பாக அவர் வீட்டில், வேலை செய்யும் நபர்கள் தான் எடுத்திருக்க வேண்டும் என நினைத்தாராம்.

அனைத்து வேலையாட்களையும் அழைத்து விசாரிப்பதற்கு சங்கடமாக இருந்ததால், வீட்டில் வேலை செய்த அனைத்து வேலைக்காரர்களையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டாராம்.

பலர் தங்கள் கஷ்டத்திற்காக வீட்டு வேலை செய்து வரும் நிலையில், சமந்தாவின் செயல் உண்மையான வேலைக்காரர்களையும் அவமான படுத்துவது போல் உள்ளது என கூறப்படுகிறது.