பிரபலங்கள் வீட்டில் எதாவது முக்கிய விழாக்கள் நடைபெற்றால், எதாவது வித்தியாசமாக செய்து மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என நினைக்கின்றனர்.

அப்படித்தான் நடிகை சமந்தா ஒட்டு மொத்த பெண்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளார் தன்னுடைய சேலை மூலமாக. அப்படி என்ன ஸ்பெஷல் அந்த புடவையில் என நினைக்கிறீர்களா....???

சமந்தா நாகசைதன்யாவின் காதலில் விழுந்த 'ஏ மாச சேசவா' படத்தின் நினைவுகள் முதல், அவர்கள் முதலில் டேட்டிங் சென்ற இடம், அகில் நிச்சயதார்த்தத்தில் போது முதல் முதலாக எடுத்துக்கொண்ட பேமிலி போட்டோ வரை அனைத்து நினைவுகளையும் புடவையில் வடிவமைத்துள்ளார்.

இந்த புடவையை சமந்தாவிற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர் 'கேஷா பஜாஜ்' வடிவமைத்துள்ளார். வெள்ளை மற்றும் தங்க நிறத்தால் வடிவமைக்க பட்ட இந்த புடவை 3 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

மேலும் இந்த புடவையை பார்த்து பலரும் சமந்தாவை பாராட்டினார்களாம்.