Samantha : சமந்தா தனது இரண்டு நாய்களுடன் காரில் பயணிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

சுமார் 7 வருடத்திற்கு மேல் உருகி... உருகி... காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட சில வருடங்களில் பிரிவார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே இவர்களது விவாகரத்து குறித்து தகவல் வெளியான போது மௌனம் காத்த இவர்கள், பின்னர் ஒரே நேரத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்கிற எமோஷ்னல் பதிவுடன் விவாகரத்தை அறிவித்தனர். விவாகரத்துக்கு பின் எழுந்த சில வதந்திகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா, தற்போது அதில் இருந்து மீண்டு தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை வேற லெவலுக்கு துவங்கியுள்ளார்.

இதுநாள் வரை கோலிவுட் - டோலிவுட்டில் நடித்ததை தொடர்ந்து தற்போது பாலிவுட், ஹாலிவுட் ரேஞ்சுக்கு சர்ச்சையான கதாபாத்திரத்தை கூட துணிச்சலோடு தேர்வு செய்து நடிக்க தயாராகி விட்டார். ஒற்றை பாடலுக்கு கூட ஆட ஓகே சொல்லும் சமந்தா, சம்பள விஷயத்தில் மட்டும் கறார் காட்டுவதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே விவாகரத்து குறித்து சமீபத்தில் பேசியிருந்த சமந்தா; விவாகரத்து காரணமாக நான் உடைந்து போய் விடுவேன் அப்படியே இறந்து போய் விடுவேன் என நினைத்தேன். ஆனால் நான் வலிமையானவளாக அதில் இருந்து மீண்டு இந்த இடத்தில் வந்து நிற்கிறேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது இரண்டு நாய்களுடன் காரில் பயணிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் பெண் நாய் ஆன் நாய் மீது காலை தூக்கிப்போட்டு அரவணைத்து போல நின்று வேடிக்கை பார்க்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாய்கள் கூட ஜோடியாகவுள்ளது... ஆனால் நீங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

View post on Instagram