நடிகை சமந்தா தற்போது தமிழில், எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் 'மன்மதடு 2 ' மற்றும் 96 படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகும் பல வெற்றி படங்களை கொடுத்து வருவதால், இவருக்கு வரிசையாக பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.  ஆனால் தன்னை தேடி வரும் அனைத்து பட வாய்ப்புகளையும், ஏற்காமல் குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் சமந்தா.

அந்த வகையில், சமீபத்தில் வெளியான 'ஓபேபி'  திரைப்படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.  இந்த படம் மூன்று நாட்களில் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய கணவர் நினைவாக உடலில் போட்டிருந்த நாகா என்கிற ஒரே ஒரு டாட்டூவை மட்டும் ரகசியமாக வைத்திருந்தார்.  இத்தனை நாட்கள் யாருக்கும் தெரியாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த இந்த டாட்டூவை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.