samantha and nagasaithanya marrigae again postpone
நடிகை சமந்தாவும் , தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. இவர்கள் திருமணம் மே மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது தீடீர் என இவர்கள் திருமணம் அக்டோபர் மதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நாகசைதன்யாவின் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் சமந்தாவும், நாகசைதன்யாவும் அதிக படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருவதே திருமணம் தள்ளிப்போனதற்கு காரணம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் சமந்தா தற்போது விஜய்யின் 61-வது படத்தில் அவருக்கு ஜோடியாகவும், இரும்புத்திரை படத்தில் விஷால் ஜோடியாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார் அதே போல் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்திலும் இரண்டு தெலுங்கு படங்களும் கைவசம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து படங்களையும் அக்டோபர் மாதத்துக்குள் முடித்து விட்டு திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். சமந்தாவின் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்களை வைத்து நடத்தப்பட்டாலும் திருமணத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
