salman khan next heroine mounirai
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நாகினி' என்கிற தொடர் மூலம், இல்லத்தரசிகள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தவர் 'மௌனி ராய்'.
தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில், நடித்து வருகிறார். இவருக்கு இளைஞர்களிடம் இருந்த வரவேற்பை பார்த்து ஒரு சில கோலிவுட் தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் இயக்க முயற்சி செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் 'பிக் பாஸ் 10 ' நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட இவர், சல்மான்கானை வெகுவாக கவர்ந்து விட்டாராம்.
இதனால் அடுத்ததாக சல்மான் கான் தயாரிக்கும் படத்தில் இவரை தான் ஹீரோயினாக அறிமுகம் செய்யவுள்ளார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே சல்மான் கான், ஜீரா கான், சோனாக்க்ஷி சின்ஹா, ஆதித்யா ஷெட்டி, டெய்சி ஷா, ஆகியோரை அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது
