பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த படம் சுல்தான்.

இப்படம் ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பாலிவுட்டில் பிரமாண்ட சாதனை படைத்தது.

படம் வெளிவந்து இத்தனை நாட்கள் கழித்தும் தற்போது இந்த படம் பிரமாண்ட சாதனை ஒன்றை படைத்துள்ளது.

சுல்தான் படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல சேனல் ஒன்று தற்போது வாங்கியுள்ளது, இப்படத்தை ரூ 55 கோடிக்கு அந்த சேனல் வாங்கியுள்ளதாம்.

இந்தியாவிலேயே ரூ 55 கோடி கொடுத்து ஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமைத்தை கைப்பற்றுவது இதுவே முதன் முறையாம். சுல்தான் படத்தில் நடித்தது மூலம் இந்த மொத்த பெருமையும் சல்மான் கான்னுக்கு செல்கிறது .