sakthi and gayatri join the couple and snehan issue
"பிஸ் பாஸ்" நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடக்கிறது. அப்படிதான் இன்று நடைபெற உள்ளதை சுருக்கமாக ஒரு பிரோமோவில் தெரிவித்துள்ளனர்.
அதில், கொடுக்கப்பட்ட டாஸ்கில், குடும்ப உறுப்பினர் அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. முதலாவதாக மூத்த அண்ணனாக தேர்தெடுக்கப்பட்டவர் காமெடி நடிகர் வையாபுரி.
இவர் இந்த குடும்பத்தில் முதல் மகனாக கணேஷ் வெங்கட்ராமையும், மருமகளாக நமிதாவையும் தேர்வு செய்தார். இரண்டாவது மகனாக சக்தியையும் மருமாளாக காயத்ரியையும் தேர்வு செய்து இரண்டு ஜோடிகளும் தனித்தனியாக நின்றனர்.
இதில் முக்கியமான ஒரு விஷயம் ஒருவர் வேலையாளாக தேர்வு செய்யப்பட்டு அவர் தான் அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும் என்பது தான். இந்த வேலைக்காரனாக தேர்வு செய்யப்பட்டவர் பாடலாசிரியர் சினேகன். வேலைக்காரனுக்கு ஏற்றாப்போல் உடை அணிந்து அவர் மிகவும் பாவமாக அமர்ந்திருக்கும் காட்சிகளும் பிரோமோவில் வெளியாகியுள்ளது.
