நடிகை சாய் பல்லவி வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் அறிமுகமான 'ப்ரேமம்' படம் இவருக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது மட்டும் இன்றி, மலையாள திரையுலக ரசிகர்களை மட்டும் அல்லாமல் அனைத்து தென்னிந்திய ரசிகர்களையும் இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

இதை தொடர்ந்து, இவர் தமிழில் நடித்த, கரு, என்.ஜி.கே. உள்ளிட்ட படங்களுக்கு எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கில் இவர் நடித்த படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

இந்நிலையில் முத்த காட்சியில் நடிக்க முடியாது என்று விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மறுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து, விஜய் தேவரக்கொண்டா மற்றும் ராஷ்மிக்கா மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'டியர் காம்ரேட்' இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, ஜூலை 26 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில், முதலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு நடிகை சாய் பல்லவிக்கு தான் சென்றதாம். இந்த படத்தின் கதை பிடித்திருந்தும் முத்த காட்சி இருப்பதால்,விஜய் தேவரக்கொண்டாவிற்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டாராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.