மலையாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி, மலர் டீச்சர் என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தொடர்ந்து. அவர், தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்றதை தொடர்ந்து, அவர் தமிழ்த்திரையில் தனுஷுடன் ’மாரி 2’,சூர்யாவுடன் என்ஜிகே’ உள்பட சில ஹிட் படங்களிலும், சில மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
 
இதைதொடர்ந்து, சாய் பல்லவி தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றி மாறன் இயக்ககத்தில், ரிலீசான ஆந்தாலஜி படமான ’பாவக்கதைகள்’ படத்தில் சாய்பல்லவி நடித்தார்.  அதில் நடித்த சுமதி கதாபாத்திரம், அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. 

இந்நிலையில் தற்போது தமிழ் காமெடி நடிகர் காளிவெங்கட் நடிக்க உள்ள படத்தில், சாய்பல்லவி ஜோடியாக நடிக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி, தொடர்ந்து நடந்து வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் உள்பட பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த சாய்பல்லவி, காளி வெங்கட் ஜோடியாக நடிப்பதாக கூறப்படும் செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.