பேட்மிட்டன் வீராங்கனை, சாய்னா நேவால் வாழ்க்கை திரைப்படமாக தயாராகி வருகிறது.  இந்த படத்தில் நடிகை ஷ்ரதா கபூர், சாய்னா நேவால்  கதாப்பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கியது. பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அமேல் குப்தா படத்தை இயக்கினார். இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நடிகை ஷ்ரத்தாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் படப்பிடிப்பை தள்ளி வைத்தனர் படக்குழுவினர். தற்போது ஷ்ரதா உடல் நலம் தெரியுள்ளதால்அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் திடீரென்று இந்த படத்தில் இருந்து ஷ்ரதா கபூர் விலகியுள்ளார்.

படப்பிடிப்பு தேதிகளை அடிக்கடி மாற்றி அமைத்ததால், படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை தொடர்ந்து அவருக்கு பதிலாக சாய்னா நேவால் வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை பரினீதி சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் புஷன் கூறும்போது...கால்ஷீட் பிரச்சினையால் ஷ்ரத்தா இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் இதனால் படத்திலிருந்து அவர் விலகுவதாக தெரிவித்தார்.

எனவே அவருக்கு பதிலாக பரினீதி நடிக்கிறார் என்றும் இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து அடுத்த வருடம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.