saif alikhan open talk her daughter
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் 'சைப் அலிகான்'. சமீபத்தில் தான் இவருடைய இரண்டாவது மனைவியும், நடிகையுமான 'கரீனா கபூருக்கு' கடந்த சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்து.
இந்நிலையில் இவருடைய முதல் மனைவியின் மகள் படங்கள் நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார். நடிப்பதற்காக பல தயாரிப்பாளர்களிடம் தீவிர பட வேட்டையிலும் ஈடுபட்டார்.
ஆனால் மகளின் இந்த முடிவில் 'சைப் அலிகானுக்கு' சுத்தமாக உடன் பாடு இல்லை என கூறப்படுகிறது. இதனால் தந்தை மக்களுக்குள் பல நாட்களாக பெரிய வாக்குவாதமே நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது.
தற்போது இது குறித்து 'சைப் அலிகானிடம் செய்தியாளர்கள் அவர் மகள் திரைப்படத்தில் நடிக்கவருவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, என் மகளுக்கு ஏன் இப்படி ஒரு பிழைப்பு.
அவர் நல்லவிதமாக அமெரிக்காவில் உயர்ந்த படிப்பு படித்துள்ளார். அவர் நினைத்தால் நடிப்படத்தை விட அதிகமாக சம்பாதிக்கலாம் என கூறினார்.
மேலும் நான் ஒரு நடிகன் என்கிற விதத்தில் நடிப்பை குறைவாக மதிப்பிட வில்லை ஆனால், இது நிரந்தரம் இல்லை அதனால் என் மகளுக்கு இந்த துறை வேண்டாம் என்பது தான் என் கருத்து என தெரிவித்துள்ளார்.
