பிரேமம் என்கிற ஒரு படத்தின் மூலம் மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்களையும் மலரே மலரே என புலம்ப வைத்தவர் சாய் பல்லவி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் எப்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவரும் இந்த படம் மூலம் தமிழுக்கு வருகிறார், அந்த படம் மூலம் வருகிறார் என பல செய்திகள் வந்துகொண்டு இருந்தாலும் இது வரை எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

இந்நிலையில் தற்போது அவர் விக்ரம் நடிக்க இருக்கும் புது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் விக்ரம் படத்தில் சாய் பல்லவி நடித்தாலும், அவருக்கு இவர் ஜோடி இல்லை. ஏனெனில் விக்ரம் 'டோன்ட் பிரீத், என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் வயதான வேடத்தில் நடிக்கிறார்.

இதனால் சாய் பல்லவி விக்ரமிற்கு ஜோடியாக நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது மேலும் இந்த படத்தில் சாய் பல்லவி நடிப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் மீண்டும் ரசிகர்களை ஏமாற்றியுள்ளார் சாய் பல்லவி.