'பிரேமம்' படத்தில் மலர் டீச்சராக வந்து, மலையாள திரையுலக ரசிகர்களை மட்டும் இன்றி, தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. தற்போது, மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதே போல் இவர் தமிழிலும் 'தியா', 'மாரி 2 ', 'என்.ஜி.கே', ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இவர் தமிழில் நடித்து வெளியான படங்களுக்கு எதிர்ப்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் மற்ற மொழி படங்கள் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

சாய் பல்லவி நடித்து வெளியான மூன்று படங்களுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில், பெரியதாக வரவேற்பு இல்லாததால் இவரை இயக்குனர்கள் புக் செய்ய யோசித்து வருவதாகவும், இதனால் சாய் பல்லவி மிகுந்த ஏமாற்றத்துடனும், வருத்தத்திலும் உள்ளதால் , இனி தமிழ் படங்களில் நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.