கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் குறித்த அனல் இன்னும் தீரவில்லை. இது குறித்து கண்டனம் எஸ்.வி சேகரை துரத்தி வருகிறது. இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் குறித்த அவதூறு செய்தியை பகிர்ந்ததற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர தயாராகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எஸ்வி சேகரின் நாடகப்பயணம் :
திரைப்பட நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் தமிழ் மொழி நாடகங்களின் நாடக ஆசிரியராக வலம் வரும் எஸ்வி சேகர்.. அவன் ஒரு தனி மரம், கண்ணாமூச்சி, திரும்பி வந்த மனைவி, பாலவாக்கத்தில் பைத்தியக்கார திருடர்கள், குத்தகைதாரர் கட்டளைகள், இன்னும் ஒரு எக்ஸ்கார்சிஸ்ட் என கிட்ட தட்ட 31 நாடகங்களை இயக்கி நடித்துள்ளார்.
திரைப்பட பிரவேசம் :
நினைத்தாலே இனிக்கும், சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக வந்திருந்த எஸ்.வி. சேகர்..வரதட்சணை கல்யாணம்,ஊருக்கு உபதேசம், சிதம்பர ரகசியம் உள்ளிட்ட சீர்திருத்தம் கதைக்களத்தில் நடித்துள்ளார். பெரும்பாலும் விசுவின் பெரும்பாலான படங்களில் எஸ்.வி சேகர் கண்டப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு...அதிர்ச்சியில் எஸ்.வி சேகர்.. அலறவிட்ட நீதிபதி.. மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா.? சரமாரி கேள்வி..
அரசியல் பிரமுகர் :
கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியலில் நுழைந்தார் எஸ்.வி.சேகர். பின்னர்கடந்த 2009 அன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வி.சேகர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். கட்சியின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டதற்காக சேகர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து பாஜகவில் சேர்ந்தார்.

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த விமர்சனம் :
முன்னாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது ஒரு பெண் பத்திரிகையாளர் தனது கன்னத்தைத் தட்டியதற்காகப் புகார் அளித்திருந்தார்.இது குறித்த விமர்சங்கள் தீயாய் பரவி வந்த வேளையில் எஸ்.வி சேகர் பேஸ் புக்கியில் ஒரு இடுகையை பகிர்ந்திருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பெண் பத்திரிகையாளர்களும் தங்கள் வேலையைப் பெறுவதற்காக உயர்மட்ட முதலாளிகளுடன் உறங்குவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பின்னர் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. ஆனால் எஸ்.வி சேகர் ஜாமீன் கிடைக்கும் வரை கைது செய்யப்படவில்லை.
நீதிபதி சரமாரி கேள்வி :
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பேஸ் புக்கில் வரும் போஸ்டுக்களை படிக்காமல் பகிர்ந்ததாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் எஸ்.வி சேகர் படிக்காமல் பார்வர்டு செய்து விட்டதாக கூறி மன்னிப்பு கோரினால் எல்லாம் சரியாகிவிடுமா என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்த நீதிபதி வழக்கை ரத்து செய்ய இயலாது என கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..."ஜெயலலிதா ஆவியுடன் பேசி வருகிறேன்" .. பொய் அல்ல 100 சதவீதம் உண்மை.. எஸ்.வி சேகர் பகீர்.
மன்னிப்பு கேட்க தயார் :
கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் குறித்த அனல் இன்னும் தீரவில்லை. இது குறித்து கண்டனம் எஸ்.வி சேகரை துரத்தி வருகிறது. இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் குறித்த அவதூறு செய்தியை பகிர்ந்ததற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர தயாராகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
